விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
உசிலம்பட்டி பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மதுரை
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள விளைநிலங்களை அடிக்கடி காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாகவும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். உசிலம்பட்டி கிராமப்புற பகுதிகளுக்கு சென்று வந்த அரசு பஸ்கள் தற்போது முறையாக இயக்கப்படுவதில்லை. எனவே கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கிராமப் பகுதிகளுக்கு முறையாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story