டி.என்.பாளையம், கடம்பூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி

டி.என்.பாளையம், கடம்பூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி
x

டி.என்.பாளையம், கடம்பூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி

ஈரோடு

டி.என்.பாளையம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டி.என்.பாளையம் வனச்சரகம், கடம்பூர் வனச்சரகங்களில் நேற்று முன்தினம் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள் என அனைத்து வனவிலங்குகளின் எச்சம், கால் தடங்கள், நகக் கீறல்கள் மற்றும் நேரடியாக பார்த்தல் ஆகியவற்றை வைத்து வனவிலங்குகள் எண்ணிக்கைகள் கணக்கு எடுக்கப்படுகிறது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், வனச்சரக அலுவலர்கள் முன்னிலையிலும் வேட்டை தடுப்பு காவலர்கள், வனக்காவலர்கள், வனக்காப்பாளர் மற்றும் வனவர்கள் வனவிலங்குகளை கணக்கெடுத்து வருகின்றனர். வருகிற 7-ந் தேதி வரை இந்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

Next Story