மலேசியாவில் தவிக்கும் கடையநல்லூர் தொழிலாளியை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனைவி மனு


மலேசியாவில் தவிக்கும் கடையநல்லூர் தொழிலாளியை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனைவி மனு
x

மலேசியாவில் தவிக்கும் கடையநல்லூர் தொழிலாளியை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனைவி மனு அளித்துள்ளார்.

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் தக்வா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செய்யது அலி (வயது 45). இவர் கடையநல்லூரை சேர்ந்த ஒரு ஏஜெண்டு மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மலேசியா நாட்டில் உள்ள ஓட்டலுக்கு தொழிலாளியாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து கடந்த 4 மாதம் மட்டும் செய்யது அலி தனது மனைவி பாத்திமாவுக்கு சம்பள பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில், மலேசியாவில் இருந்து செய்யது அலி, வாட்ஸ்-அப் மூலம் பேசி தனது மனைவிக்கு தகவல் அனுப்பினார். அதில் கடும் பணிச்சுமை மற்றும் கெடுபிடியில் சிக்கித்தவித்து வருவதாகவும், நான் சித்ரவதை செய்யப்படுவதாகவும் கூறிஇருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாத்திமா இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றில் தனித்தனியாக புகார் மனு கொடுத்தார். மலேசியாவில் சிக்கி தவிக்கும் எனது கணவரை மீட்டு தரும்படி கூறி இருந்தார்.


Next Story