குமரியில் பரவலாக மழை


குமரியில் பரவலாக மழை
x

குமரியில் பரவலாக மழை குழித்துறையில் 40 மில்லி மீட்டர் பதிவு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது, நாகர்கோவில், மயிலாடி, பூதப்பாண்டி, தக்கலை, குழித்துறை, திருவட்டார், குலசேகரம், பெருஞ்சாணி, மாத்தூர், பொன்மனை, மாத்தார், சிதறால், திற்பரப்பு, கோதையாறு என அனைத்து பகுதிகளிலும் நேற்று மதியத்திற்கு மேல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

திற்பரப்பு பகுதியில மழை பெய்வதால், அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திற்பரப்பு அருவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அனைவரும் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். திற்பரப்பு அணைக்கட்டில் வழக்கம்போல் படகு சவாரி நடந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குழித்துறை பகுதியில் 40.5 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆனைக்கிடங்கு- 32, நாகர்கோவில் - 9, பேச்சிப்பாறை- 6.6, புத்தன் அணை- 5.4, மயிலாடி- 5.4, குருந்தன்கோடு- 5.8, முள்ளங்கினாவிளை- 3.4, கோழிப்போர்விளை- 3.2, கொட்டாரம்- 2.4 என பதிவாகி இருந்தது.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 413 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 191 கனஅடி நீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 5.6 கனஅடி நீரும் வருகிறது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இ்ருந்து வினாடிக்கு 584 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 175 கனஅடி நீரும், முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.


Next Story