'எல்லோரும் மதுவிலக்கை ஆதரித்தால் தமிழ்நாட்டில் ஏன் மதுக்கடைகள் திறந்திருக்கின்றன?' - திருமாவளவன் கேள்வி


எல்லோரும் மதுவிலக்கை ஆதரித்தால் தமிழ்நாட்டில் ஏன் மதுக்கடைகள் திறந்திருக்கின்றன? - திருமாவளவன் கேள்வி
x

எல்லோரும் மதுவிலக்கை ஆதரித்தால் தமிழ்நாட்டில் ஏன் மதுக்கடைகள் திறந்திருக்கின்றன? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம்,

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"எல்லோரும் மதுவிலக்கை ஆதரிக்கிறோம் என்றால், தமிழ்நாட்டில் மதுக்கடைகள் ஏன் திறந்திருக்கின்றன? என்பதே என்னுடைய கேள்வி. இந்த அடிப்படையில் யாராவது விவாதம் செய்கிறார்களா? நான் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புகிறார்கள்.

திருமாவளவன் அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்துவிட்டார் என்றும், தி.மு.க. கூட்டணி உடைந்துவிட்டது என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மதுஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.விற்கு நான் அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் இல்லை.

வார்த்தை தவறி, எதேச்சையாக கூறிவிட்டேன் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. மனதில் மதுஒழிப்பு என்ற கொள்கையும், அரசியல் தெளிவும் இருப்பதால்தான் வார்த்தைகளில் அது வெளிவருகிறது. எல்லோரும் சேர்ந்து செயல்பட்டால் என்ன தவறு? மதுஒழிப்புக்காக தானே அழைக்கிறோம்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.


Next Story