நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் யார்? - அமைச்சர்கள் இன்று ஆலோசனை


நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் யார்? - அமைச்சர்கள் இன்று ஆலோசனை
x

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நெல்லை,

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.

அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் நெல்லை மாநகராட்சிக்கு மேயர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு, கட்சி தலைமை மூலம் அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.


Next Story