திருச்செந்தூர் முருகன் கோவிலின் பணிகள் எப்போது முடியும்? வெளியான தகவல்
திருச்செந்தூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக சட்டமன்ற உறுதிக்குழு தலைவர் வேல்முருகன் கூறினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை தமிழக சட்டமன்ற உறுதிக்குழு தலைவர் வேல்முருகன் நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
இந்த பணிகள் அனைத்தும் 2025-ம் ஆண்டிற்குள் நிறைவடைந்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்தால், இந்தியாவிலேயே அனைத்து மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் உள்ளடக்கிய கோவிலாக திருச்செந்தூர் இருக்கும் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story