தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் எப்போது? - வெளியான தகவல்


When will the party flag of TVK be introduced?
x

த.வெ.க. கட்சிக்கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியானது.

சென்னை,

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வேகம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கட்சி தொடங்கிய பின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மாநாடு நடத்துவதற்காக ஆயத்த பணிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைக்கும் வண்ணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், த.வெ.க. கட்சிக்கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை வரும் 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு முன்பாக கட்சி கொடியை த.வெ.க தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story