போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு எப்போது?
திருச்சுழியில் போக்குவரத்து ெநரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி,
திருச்சுழியில் போக்குவரத்து ெநரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளர்ந்து வரும் நகரம்
திருச்சுழியில் எண்ணற்ற பகுதிகள் வளர்ந்து வருகின்றன. நகர பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை அடிப்படையில் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது மக்கள் தொகை அதிகரித்து விட்டது. இதன் காரணமாக இரு சக்கரம், நான்கு சக்கரம் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ேட செல்கிறது.
அதேபோல இந்த பகுதிகளில் தொழில்ரீதியாக அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கின்றது. பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. ஆனால் அதற்கு தகுந்த படி போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை.
போக்குவரத்து நெரிசல்
திருச்சுழியில் பள்ளி நேரத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
திருச்சுழியில் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் சிக்னல்களும் செயல்படாத காரணத்தால் போக்குவரத்து போலீசார் நெரிசலை சரி செய்ய முடியாத நிலை உள்ளது. ஆதலால் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.