கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு


கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு
x

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

சென்னை

சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு கட்டிட தொழிலாளர்கள் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 45). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தீனதயாளன் என்பவரது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் ஏழுமலை கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏழுமலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story