உங்களுக்கு இருப்பது ஆன்மீக பக்தியுமல்ல, தேச பக்தியுமல்ல; தனியார் பக்தி மட்டுந்தான் - ரெயில்வே மீது சு.வேங்கடேசன் காட்டம்
தெற்கு ரெயில்வேயில் தனியார் ரெயில் இயக்கப்படுவது தொடர்பான உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை,
ஜூன் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரெயில் இயங்க தெற்கு ரெயில்வே அனுமதித்துள்ளது. இந்த நிலையில், இந்த தனியார் ரெயில் இயக்கப்படுவது தொடர்பான உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"தெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயில் கோவையிலிருந்து சீரடிக்கு !
இரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா?
இரயில்வே நிர்வாகமே உத்தரவை திரும்பப்பெறு. ரயில்வே மக்களின் சொத்து. உங்களின் சொத்தல்ல, யாருக்கும் தாரைவார்க்க. முதல் பயணத்திலே பக்தர்களுக்கு மூன்று மடங்கு கட்டணம். உங்களுக்கு இருப்பது ஆன்மீகத்தின் பக்தியுமல்ல, தேச பக்தியுமல்ல. தனியார் பக்தி மட்டுந்தான்." என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story