ஆற்றில் மூழ்கிய 2 வயது குழந்தையின் கதி என்ன?
ஆற்றில் மூழ்கிய 2 வயது குழந்தையின் கதி என்ன?
தஞ்சாவூர்
திருவிடைமருதூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் மகன் பிரிடிக்ஸ் சாம்சன்(வயது 22). இவர், அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஸ்டாலின் என்பவரது 2 வயது குழந்தை ரோஜரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு திருவிடைமருதூர் கீழத்தூண்டில் விநாயகன்பேட்டை வீரசோழன் ஆற்று கட்டுக்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார். இதில் ஸ்டாலின் மட்டும் தண்ணீரில் நீந்தி கரையேறினார். ஆற்றில் மூழ்கிய ரோஜர் அடித்து செல்லப்பட்டான். தகவல் அறிந்ததும் திருவிடைமருதூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் மூழ்கிய 2 வயது குழந்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story