Normal
கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பீதி - சுகாதாரத்துறை மந்திரி விளக்கம்
வெஸ்ட் நைல் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருச்சூரில், வெஸ்ட் நைல் என்ற நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் பரவியதையடுத்து, அங்கு பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இது குறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், வெஸ்ட் நைல் காய்ச்சல் கொசுக்களால் பரவும் நோய் என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், இந்த நோய் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story