4 அடுக்கு சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு


4 அடுக்கு சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2022 11:39 PM IST (Updated: 4 Jun 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

அகரத்தில் நடந்துவரும் அகழாய்வு பணியில் 4 அடுக்கு சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை

திருப்புவனம்,

அகரத்தில் நடந்துவரும் அகழாய்வு பணியில் 4 அடுக்கு சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அகழாய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்தது அகரம் கிராமம். இங்கு கடந்த வருடம் நடைபெற்ற 7-ம் கட்ட அகழாய்வு பணியின்போது சிறிய, பெரிய பானைகள், ஓடுகள், சுடுமண்ணால் ஆன உறைகிணறுகள், பொம்மைகள், பழங்கால செங்கல் சுவர் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இங்கு தோண்டப்பட்ட முதல் குழியில் மண்பாண்ட ஓடுகள், சிறிய பானைகள், சிறுவர், பெண்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள், கண்ணாடி பாசி மணிகள், சங்கு வளையல்கள், பழங்கால விலங்குகளின் எலும்புகள் உள்பட பல பொருட்கள் கிடைத்தன.

சுடுமண் உறைகிணறு

2-வது குழி தோண்டி அகழாய்வு பணிகளில் ஈடுபட்டபோது சுடுமண் பாசிமணிகள், சிவப்பு நிற சிறிய மண் பானை போன்ற குடுவை கிடைத்து உள்ளது. தற்போது 3-வது குழி தோண்டி அகழாய்வு பணிகள் நடைபெற்றபோது ஏற்கனவே 2 அடுக்குகளை உடைய சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அகழாய்வு பணிகள் செய்ததில் கூடுதலாக 2 அடுக்குகள் தெரியவந்தது.

மொத்தம் நான்கு அடுக்குகளுடன் சுடுமண் உறைகிணறு காட்சி அளிக்கிறது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் செய்யும்போது இன்னும் கூடுதலாக சுடுமண் உறை அடுக்குகள் கிடைக்கலாம் என தெரிகிறது.


Next Story