மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மொத்தம் 337 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு தலா ரூ.8,500 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரத்து 500 மதிப்பிலான காதொலி கருவிகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷேக், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story