செங்கல்பட்டு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை


செங்கல்பட்டு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை
x

செங்கல்பட்டு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டில் நடைபெற்றது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் நல வாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டில் நடைபெற்றது. முகாமை செங்கல்பட்டு நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் இளம்பரிதி முன்னிலை வகித்தார்.

முகாமில் செங்கல்பட்டு நகர்மன்ற துணை தலைவர் அன்பு செல்வம் 4-வது வார்டு உறுப்பினர் யாசிம் பேகம், 33-வது வார்டு உறுப்பினர் சந்தோஷ் கண்ணன் நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பவானி மாவட்ட தாய்சேய் நல அலுவலர் வினலி சாம்சன், செங்கல்பட்டு மாவட்ட தாட்கோ மேலாளர் தபசுகனி, செங்கல்பட்டு நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர். முத்து ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் செங்கல்பட்டு நகராட்சி நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 250 பேர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.


Next Story