ரூ.79½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


ரூ.79½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x

ரூ.79½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நாகப்பட்டினம்

நாகையில் நடந்த மீனவர் குறைதீர் கூட்டத்தில் ரூ.79½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மீனவர் குறைதீர் கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கலந்து கொண்டு ரூ.79 லட்சத்து 46 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், தமிழ்நாடு அரசு மீனவர் நலன்சார்ந்த அரசாக செயல்படுகிறது. அதனால் மீனவர்கள் என்ன கேட்டாலும் முதல்வர் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்.

நல்ல நண்பனாக இருக்க வேண்டும்

எனவே மீனவர்கள் அரசுக்கு நல்ல நண்பனாக இருக்க வேண்டும். ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி ராமேஸ்வரம் மண்டபத்தில் முதல்வர் மீனவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க உள்ளார். எனவே எல்லா தரப்பு மீனவர்களும் தங்களது குறைகளை முதல்வரிடம் தெரிவித்து பயன் பெற வேண்டும் என்றார்.

இதில் சார் ஆட்சியர் ரஞ்சித்சிங், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, உதவி இயக்குனர் ஜெயராஜ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story