ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி


ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
x

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் ஏழைகளுக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 14-வது வார்டு கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த 3 விதவை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், 3 பேருக்கு இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார். தேர்தல் பிரசாரத்தில் அறிவித்தபடி தனது சம்பள பணத்தை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கி வருகிறார். அதன்படி 6 மாணவ-மாணவிகளின் வீடு தேடிச் சென்று கல்வி உதவித்தொகை வழங்கினார். விக்கிரமசிங்கபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் கண்ணன், அம்பை நகர செயலாளர் அறிவழகன், முன்னாள் மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் சிவன் பாபு, மாவட்ட கலை இலக்கிய அமைப்பாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து பொதிகையடியில் ரூ.9.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கும், தெற்கு அகஸ்தியர்புரத்தில் ரூ.10 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார். விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் கண்மணி, பணி பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story