ஜமாபந்தியில் 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


ஜமாபந்தியில் 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடத்தில் நடந்த ஜமாபந்தியில் 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் 2023-ம் ஆண்டுக்கான ஜமாபந்தி சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை பரிசீலித்து, தகுதியுள்ள பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை 35 பேருக்கும், வரன்முறை பட்டா 10 பேருக்கும், இலவச வீட்டுமனை பட்டா 10 பேருக்கும், புதிய குடும்ப அட்டை 25 பேருக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தாசில்தார்கள் பரமசிவன், திருமலைச்செல்வி, துணை தாசில்தார்கள் நாகராஜன், நிவேதிதா, சங்கரேஸ்வரி, சண்முகநாதன், வருவாய் ஆய்வாளர்கள் குமாரபாண்டியன், மாரியம்மாள், கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நில அளவையர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story