1000 பேருக்கு நலத்திட்ட உதவி; எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்


1000 பேருக்கு நலத்திட்ட உதவி; எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.

தூத்துக்குடி

உடன்குடி:

அ.தி.மு.க., இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் உடன்குடி மெயின் பஜார் அண்ணா திடலில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் உரக்கடை குணசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். உடன்குடி ஒன்றிய செயலாளர் தாமோதரன் வரவேற்றார்.

கூட்டத்தில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் வழங்கி பேசினார். இதில் அமைப்பு செயலாளர்கள் என்.சின்னத்துரை, சுதா கே.பரமசிவன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சிவ செல்வராஜன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தலைமை பேச்சாளர் முருகானந்தம், உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா, எம்.ஜி.ஆர். இளைஞரணி முன்னாள் செயலாளர் அமிர்தா மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story