மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்
கடையம் அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றியம் துப்பாக்குடி, ஏ.பி.நாடானூர் ஆகிய ஊராட்சிகளில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் துப்பாக்குடி செண்பகவள்ளி ஜெகநாதன், ஏ.பி.நாடானூர் அருணாசலம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், சமுக நலத்துறை நல அலுவலர் மதிவதனா, பயிற்சி துணை கலெக்டர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஒசனா பெர்ணாண்டோ வரவேற்றார். கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.கே.பாண்டியன், பஞ்சாயத்து தலைவர்கள் திருமலையப்பபுரம் மாரியப்பன், பொட்டல்புதூர் கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
முகாமில் பல்வேறு துறைகள் மூலம் மொத்தம் 76 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்து 4 ஆயிரத்து 324 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி ஆணையாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைமுருகன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராமர்கிளி, உதவி பொறியாளர்கள் விஜயராஜ், ஜீவானந்தம், மாவட்ட தாட்கோ மேலாளர் ரமேஷ்குமார், மாவட்ட உதவி வேலைவாய்ப்பு அலுவலர் மார்த்தாண்டபூபதி, கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) கோபி கிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சல் ராணி, வட்ட வழங்கல் அலுவலர் அப்துல் சமது, தலைமையிடத்து துணை தாசில்தார் சாமி, கால்நடை உதவி இயக்குனர் தங்கராஜ், உதவி கால்நடை மருத்துவர் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.