409 பேருக்கு ரூ.1 ¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்


409 பேருக்கு ரூ.1 ¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்
x

பரமத்திவேலூா் அருகே 409 பேருக்கு ரூ.1 ¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

நலத்திட்ட உதவிகள்

பரமத்திவேலூர் அருகே உள்ள நஞ்சை இடையாற்றில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 409 பயனாளிகளுக்கு ரூ.1.74 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம், மாவட்ட குழந்தைகள் அலகு சார்பில், கல்வி உதவித்தொகை, வருவாய் துறையின் சார்பில் ஆதரவற்ற விதவை ஓய்வூதிய தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, திருமண உதவி தொகை, இணையவழி பட்டா மாறுதல், குடும்ப அட்டை, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட 132 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்,

67 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, 33 பயனாளிகளுக்கு இணையவழி பட்டா மாறுதல் ஆணை, 47 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, 130 தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை என மொத்தம் 409 பயனாளிகளுக்கு ரூ.1.74 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு

அதனை தொடர்ந்து பேசிய கலெக்டர் உமா பேசியதாவது:- டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் படி பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் தனிக்கவனம் செலுத்தி, 3 நாட்களுக்கு மேலாக தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனை நடைவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் போன்றவை இருப்பின் அவற்றில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

இதைத்தொடர்ந்து அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார். அதனைதொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சரவணன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story