மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் வெல்டர் வெட்டிக்கொலை; நண்பர்களுக்கு வலைவீச்சு


மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் வெல்டர் வெட்டிக்கொலை; நண்பர்களுக்கு வலைவீச்சு
x

மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் வெல்டரை வெட்டிக்கொலை செய்த அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர்.

தகராறு

திருவள்ளூரை அடுத்த தொட்டிகலை அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் வேலு (வயது 30). இவர் கடந்த 10 வருடங்களாக அப்பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் மீது வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் வேலு நேற்று மதியம் தனது நண்பர்களை போன் செய்து மது குடிக்க அழைத்து உள்ளார். இதை தொடர்ந்து வேலு வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்து அடியில் அமர்ந்து தனது நண்பர்களுடன் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது மது அருந்துவதில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

போலீசார் விசாரணை

இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் வேலுவை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் வேலு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story