இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வரவேற்பு
சாமல்பட்டியில் நின்று சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை:
கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல தொடங்கியது. இதையொட்டி தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் நிர்வாகிகள் ரெயிலுக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், நரசிம்மன் வசந்த அரசு, ரஜினி செல்வம், பேரூர் செயலாளர் பாபு சிவக்குமார், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினருமான டாக்டர் மாலதி நாராயணசாமி, ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், வணிகர் சங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டு ரெயிலை மலர் தூவி வரவேற்றனர்.
Related Tags :
Next Story