தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் வந்தால் வரவேற்போம்- கே.எஸ். அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் வந்தால் வரவேற்போம் என்று கே.எஸ். அழகிரி கூறினார்.
திருவாரூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்கள் கொடியேற்றி கல்வெட்டை திறந்துவைத்து போது. pic.twitter.com/zCJE6uYk3F
— K.S.ALAGIRI (@KS_Alagiri) August 22, 2022
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் 5 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.
காங்கிரஸ் கட்சியுடன் டி.டி.வி.தினகரன் கூட்டணி அமைப்பது குறித்து எங்களுடன் இதுவரை பேசவில்லை. அப்படி பேசினால் தேர்தல் சமயத்தில் ஆலோசிக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக கார்த்திக் சிதம்பரம் வந்தால் அதை வரவேற்போம். அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும்.
தமிழகத்தில் கவர்னர் ரவி, போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். கூட்டாட்சி முறையில் செயல்படும் அரசாங்கத்தில் தமிழக கவர்னர் ரவி தனியாக கருத்தரங்கம் நடத்தி தனது எல்லையை மீறக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.