முதல்-அமைச்சரின் அமெரிக்க பயணத்தை தோல்வி பயணமாகவே பார்க்கிறோம் - அன்புமணி ராமதாஸ்


முதல்-அமைச்சரின் அமெரிக்க பயணத்தை தோல்வி பயணமாகவே பார்க்கிறோம் - அன்புமணி ராமதாஸ்
x

போதை பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் அமெரிக்க பயணத்தை தோல்வி பயணமாகவே பார்க்கிறோம். தமிழக இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாத நிலையை உருவாக்கியதே திராவிட மாடல். மேடைக்கு மேடை மதுவின் தீமைகளை பேசிய கனிமொழி 3 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறார். போதை பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. போதை பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story