"நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல" - காங்கிரஸ் செல்வப்பெருந்தகை


நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல - காங்கிரஸ் செல்வப்பெருந்தகை
x

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க ஜனாதிபதியை ஏன் அழைக்கவில்லை ? என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஏன் ? என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு பல நாடுகளின் துதர்களை அழைத்த நீங்கள் (பிரதமர் மோடி) நாட்டின் மூத்த குடிமகள், முப்படைகளின் தலைமை பொறுப்பில் உள்ள ஜனாதிபதியை ஏன் அழைக்கவில்லை. நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்றாலும், கலைக்க வேண்டும் என்றாலும் ஜனாதிபதியின் அனுமதி தேவைப்படும் நிலையில், அத்தகைய தலைமை பொறுப்பில் உள்ள ஜனாதிபதியை அழைக்காதது என் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், "நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல, மோடியின் சனாதனத்திற்கு எதிரானவர்கள், மனிதர்களை மனிதர்களாக மதியுங்கள். இந்த நாட்டில் பிறந்தவர்கள் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. ஆனால் நீங்கள் அனைவரையும் பிரித்து பிரித்து தான் பார்க்கிறீர்கள். இது ஒரு சாராருக்கான நாடு என்றும் ஒரு மொழி வாழவேண்டும் என்றும் ஒரு சாதி வாழ வேண்டும் என்று தானே சொல்கிறீர்கள்" என கூறியுள்ளார்.


Next Story