விற்பனைக்காக குவிக்கப்பட்ட தர்பூசணி
விற்பனைக்காக தர்பூசணி குவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி
கோடையை சமாளிக்க மக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழச்சாறுகள், நுங்குகள், தர்பூசணி பழங்களை வாங்கி உட்கொண்டு, தங்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்வார்கள். தற்போது திருச்சியில் இரவு மற்றும் அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தாலும் பகலில் அதிக வெயில் காணப்படுகிறது. இதனால் தற்போதே தர்பூசணி பழங்களை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டுவர தொடங்கிவிட்டனர். திண்டிவனம் பகுதியில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட தர்பூசணி பழங்கள் தற்போது, திருச்சி ஜங்ஷனில் இருந்து கல்லுக்குழி செல்லும் சாலையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. தரத்துக்கு ஏற்ப ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பகலில் அதிக வெயில் அடித்தாலும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பழங்கள் விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story