அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்; கலெக்டர் வழங்கினார்


அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்; கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 2 March 2023 12:15 AM IST (Updated: 2 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட 26 ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.9.80 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கும் விழா ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி 26 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களிடம் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை வழங்கினார். ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ் வரவேற்றார்.

தொடர்ந்து மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் வேலை பார்க்கும் விதமாக வேலை அட்டையினை கலெக்டர் வழங்கினார். பின்னர் புதிதாக கட்டுமானப் பணி நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த ஆலங்குளம் ஒன்றிய அலுவலக கட்டிடத்தை ஆய்வு செய்தார். விழாவில் ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலர் யசோதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.


Next Story