2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
கும்பகோணம் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
தஞ்சாவூர்
கும்பகோணம்;
கும்பகோணம் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு வரும் குடிநீர் பிரதானக் குழாய்களில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவினை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே நாளை(புதன்கிழமை) மற்றும் நாளைமறுநாள்(வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கும்பகோணம் பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story