சந்தமனை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு
சந்தமனை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஏணிகவயல் ஊராட்சியில் உள்ள சந்தமனை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு அய்யனார்கோவில் அருகே சுமார் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 7 மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தமனை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஊரணி மற்றும் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் குடங்கள் மூலம் தண்ணீரை பிடித்து சென்று அதனை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.