கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை


கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
x

ஆந்திர அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும் தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேலும் 2 புதிய தடுப்பு அணைகள் கட்டுவதற்கு ஆந்திர மாநில அரசு ரூ.177 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆந்திர மாநிலம் கத்திரிப்பள்ளி என்ற இடத்திலும், மற்றொன்று நகரி மண்டலம் மொக்கலகண்டிகை என்ற இடத்திலும் கட்டப்பட உள்ளது.

இந்த தடுப்பு அணைகள் கட்டப்படுமானால், தமிழ்நாட்டிற்கு சொட்டு நீர்கூட கிடைக்காது. இதனால் வேலூர், திருவள்ளூர் மாவட்ட மக்கள் விவசாயத்திற்கு தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்படும். நிலங்கள் வறண்டு போகும் நிலை உருவாகும். கொசஸ்தலை ஆறு ஆந்திராவில் 8 ஊராட்சிகளில் மட்டுமே பாய்கிறது. இந்த ஆற்றின் தண்ணீரை திருப்பிவிட மேலும் இரண்டு அணைகளை கட்ட ஆந்திர மாநிலம் முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆந்திர மாநில அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story