பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x

காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சில நாட்களாக தும்பலஅள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் தும்பலஅள்ளி, கெண்டிகானஅள்ளி, கொட்டுமாரனஅள்ளி ,பேகாரஅள்ளி, பெரியாம்பட்டி, கோவிலூர், கெரகோடஅள்ளி, இண்டமங்கலம், முருக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகள் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ஊராட்சி தலைவர் செந்தில்குமார் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு தும்பலஅள்ளி அணை நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story