4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x

புதுப்பாளையம் கிளைக்கால்வாயில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

திருப்பூர்

புதுப்பாளையம் கிளைக்கால்வாயில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பிரதான கால்வாய்

பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி. பிரதான கால்வாய் 126 கிலோ மீட்டர் நீளம் உடையது. இதில் பொள்ளாச்சி, தாராபுரம் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் பி.ஏ.பி. பிரதான கால்வாய் 30 கிலோ மீட்டர் நீளம் உடையது. இந்த பிரதான கால்வாய் மூலம் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

தண்ணீர் திறப்பு

பூசாரிபட்டி அருகே புதுப்பாளையம் கிளை கால்வாய் மூலம் 2-ம் மண்டல பாசனத்தில் 7 ஆயிரத்து 219 ஏக்கர் விவசாய நிலங்களும், 4-ம் மண்டலத்தில் 7 ஆயிரத்து 319 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. நேற்று பி.ஏ.பி. புதுப்பாளையம் கிளை கால்வாயில் 4-ம் மண்டல பாசனத்திற்கு முதல் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாசன சபை தலைவர்கள் விஜயமோகன் (ஏ நாகூர்), சுரேஷ் (விருகல்பட்டி), நாகராஜ் (கொங்கல் நகரம்), பொன்னுசாமி (சோமவாரப்பட்டி), மனோகரன் (கொண்டம்பட்டி) பாசன விவசாயிகள், பி.ஏ.பி. அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story