ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரியில் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது.
தமிழக எல்லையான ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில், நீர் வரத்து 85 ஆயிரம் கன அடியில் இருந்து 60 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து 22-வது நாளாக ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story