கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2023 10:30 AM IST (Updated: 3 Jun 2023 10:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஆற்றில் கூடுதல் நீர் திறக்கப்படும் நிலையில் ஆறே தெரியாத அளவுக்கு ரசாயன நுரை மிதப்பதால் விவசாயிகள் ே்வதனை அடைந்துள்ளனர்.

ரசாயன நுரை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்திமலை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் உச்சப்பட்ச நீர்மட்டம் 44.28 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 41.66 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 519 கனஅடி நீர்வரத்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 750 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 640 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆற்று நீரில் அதிகளவிலான ரசாயன நுரை பொங்கி வந்தது.

விவசாயிகள் வேதனை

இதனால் ஆறே தெரியாத அளவுக்கு ரசாயன நுரை மிதந்து சென்றும், நுரை காற்றில் பறந்து அப்பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் செடி, கொடிகள் மீதும் படர்ந்தன. மேலும் அந்த வழியாத செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது நுரை படர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த ரசாயன நுரையால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.


Next Story