குழாயில் உடைப்பால் வீடுகளுக்குள் புகுந்த குடிநீர்
குழாயில் உடைப்பால் வீடுகளுக்குள் குடிநீர் புகுந்தது.
திருச்சி
செம்பட்டு:
திருச்சி ஏர்போர்ட் பாரதி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகில் உள்ள காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் காவிரி குடிநீர் வீணாகி சாலையில் ஓடியது. மேலும் அருகில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை இருந்தது. இதேபோல் கே.கே.நகர் பகுதிகளிலும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் குடிநீருடன் செம்மண் கலந்து வரும் நிலை உள்ளது. மேலும் அந்த இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கூட கீழே விழும் நிலை ஏற்படுகிறது.
Related Tags :
Next Story