வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
ஊத்துக்குளி
ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக்குளி தாலுகா செயலாளர் கொளந்தசாமி தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி, தாலுகா குழு உறுப்பினர்கள் குழந்தைசாமி, சசிகுமார், பழனிசாமி, ஊத்துக்குளி டவுன் கிளாச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை சென்னிமலை செல்லும் சாலையில் ரெயில்வே நுழைவு பாலத்தில் செல்லும் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பாலத்திற்கு அடியில் பழுதான பேவர் பிளாக் சாலையை சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு குடிநீர் இணைப்பு கோரி பலர் விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே விண்ணப்பித்து உள்ளோருக்கும், புதியதாக கோருவோருக்கும் விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்தும் உடனடியாக வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். வரைபட அங்கீகாரம், சொத்து வரி விதிப்பு செய்ய மிகவும் காலதாமதம் செய்யப்படுவதாகவும், கட்டணங்களை அதீதமாக நிர்ணயிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-