விஷ வண்டுகள் கடித்து காவலாளி சாவு


விஷ வண்டுகள் கடித்து காவலாளி சாவு
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே விஷ வண்டுகள் கடித்து காவலாளி இறந்தார்.

கடலூர்

ராமநத்தம்,

திருச்சி மாவட்டம் பெட்டவாய்தலை பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நீலமேகம் (வயது 62). இவர் ராமநத்தம் அடுத்த வெங்கனூர் அருகே, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு செல்லும் வகையில், அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயின் பாதுகாவலராக இருந்து வந்தார்.

இதில் ஏந்தலில் இருந்து சின்னாறு வரைக்கும் நீலமேகம் நடந்து சென்று காவல் பணியை மேற்கொள்வார். அந்த வகையில் நேற்று அவர் வழக்கம் போல், காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, வெங்கனூர் பாலம் அருகே சென்ற போது, அவரை விஷவண்டுகள் கொட்டியது. இதுபற்றி அவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள அலுவலகத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். பின்னர், அங்கு அவருடன் பணிபுரியும் சகபணியாளர்களர் வந்து பார்த்தார். அப்போது, நீலமேகம் மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story