தரமற்ற பணியால் வீணாகும் தார்சாலை


தரமற்ற பணியால் வீணாகும் தார்சாலை
x
தினத்தந்தி 31 Aug 2023 2:45 AM IST (Updated: 31 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

தரமற்ற பணியால் வீணாகும் தார்சாலை

நீலகிரி

குன்னூர்

குன்னூர் நகராட்சி 20-வது வார்டில் மாடல் ஹவுஸ் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை கடந்த சில ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக கிடந்தது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் சாலையை சீரமைக்கக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு அந்த சாலை புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஒருமாத காலத்திலேயே அந்த சாலை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் மீண்டும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்தனர். தொடர்ந்து ஜல்லிக்கற்கள் கொண்டு சீரமைப்பு பணி நடந்தது. ஆனால் அந்த பணி தரமாக மேற்கொள்ளப்படாததால், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் ஜல்லிக்கற்கள் அடித்து செல்லப்பட்டது. இதனால் பொதுமக்களிடைேய அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஒவ்வொரு முறையும் சாலையை சீரமைக்கும்போது, பணிகளை தரமாக செய்வது இல்லை. இதனால் ஒருநாள் மழைக்கே தாக்குப்பிடிக்காமல் வீணாக போகிறது. இனிமேலும் இதே நிலை தொடர்ந்தால், போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். தற்போது சாலை ஜல்லிக்கற்கள் மட்டும் போடப்பட்டு, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே விரைவாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.


Next Story