திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆய்வு கூட்டம்


திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 6 July 2023 2:40 AM IST (Updated: 6 July 2023 5:29 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆய்வு கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாநகரில் உள்ள 51 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாக இயக்ககம் ரூ.12 கோடியே14 லட்சத்தை கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த தஞ்சை மாநகராட்சிக்கு வெளிக்கொணர்வு முகமை (அவுட்சோர்சிங்) ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, இந்த திட்டம் சில மாதங்களாக தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பேட்டரி வாகனங்கள் மூலம் 32 ஆயிரத்து 540 வீடுகள், அலுவலகங்களிலும், இலகுரக வாகனங்கள் மூலம் 21 ஆயிரத்து 694 வீடுகளிலும், கனரக வாகனங்கள் மூலம் 3 ஆயிரத்து 581 வணிக நிறுவனங்களிலும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த தூய்மை பணி 59.19 கி.மீ. சாலையிலும், 37.68 கி.மீ. தெருக்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 20 கி.மீ. தொலைவுக்கு சாலை கூட்டும் எந்திரம் மூலம் தூய்மை பணி செய்யப்படுகிறது.

சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த நுண் உர மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன், கலையரசன், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story