கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி
பாலக்கோடு:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, அஞ்செட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று தளியில் உள்ள பெரிய ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இதனால் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. சின்னாறு அணைக்கு வரும் உபரிநீரை மதகு வழியாக திறந்து விட பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். இதனால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story