நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சேமிப்பு கிடங்குகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்


நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சேமிப்பு கிடங்குகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
x

கூட்டுறவுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், கருமத்தம்பட்டியில் பொது விநியோகத்திட்ட பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்திட 4 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப் பொருள் சோதனைக் கூடம், திண்டுக்கல், திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ரூ.17 கோடியே 4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்பு கிடங்கு வளாகங்கள், தென்காசி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மொத்தம் ரூ. 36 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடங்கள் என மொத்தம் ரூ. 57 கோடியே 95 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை, சாலி கிராமத்தில் 29,195 சதுரஅடி பரப்பளவில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இணையத்திற்கான புதிய அலுவலகக் கட்டிடம், சென்னை அண்ணா நகரில், பூங்கா நகர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில், ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகம், கடை மற்றும் மருந்தகம் ஆகியவற்றுடன் கூடிய வணிக வளாகம்,திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான மயிலாப்பூரில் உள்ள இடத்தில் தரை தளத்தில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கிளைக்கான கட்டிடம், திருமண மண்டபம், கூட்ட அரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி - மாதவபுரத்தில், சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் தரைதளத்தில் சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கான கட்டிடம் திருமண மண்டபம் , கூட்ட அரங்கம் என மொத்தம் ரூ.15 கோடியே 22 லட்சம் செலவில் கூட்டுறவுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story