வார்டு பகுதி சபை கூட்டம்
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினத்தையொட்டி மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினத்தையொட்டி மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியின் 32-வது வார்டு பகுதி சபை கூட்டம் ரவுண்டுரோடு பகுதியில் நடைபெற்றது. இதற்கு துணை மேயர் ராஜப்பா தலைமை தாங்கினார். ஆணையர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இதில் பாதாள சாக்கடை, குடிநீர், தெருவிளக்குகள், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டதோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளிக்கப்பட்டது.
இதில் மாநகராட்சி செயற்பொறியாளர் சுப்பிரமணி, தி.மு.க. வார்டு செயலாளர் முகமதுரபீக் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கருத்து கேட்கப்பட்டன.