போதிய அளவு போலீசாரை நியமிக்க வேண்டும்


போதிய அளவு போலீசாரை நியமிக்க வேண்டும்
x

ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் போதிய அளவு போலீசாரை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் போதிய அளவு போலீசாரை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக குக்கிராமங்கள்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தின் எல்லைக்குள் சுமார் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.ஒரத்தநாடு பகுதியில் அடிக்கடி நடைபெறும் விபத்து, அரசியல் மற்றும் அமைப்புகளின் கூட்டம் மற்றும் போராட்டம், போக்குவரத்து சீர்படுத்துதல் உள்ளிட்ட அன்றாட பணிக்கு போலீசார் அதிகம் தேவைப்படுகிறார்கள். ஆனால் தற்போது ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் போலீசார் பணியிடங்கள் பெரும்பாலானவை காலியாக உள்ளது.ஒரத்தநாடு போலீஸ் சரகப் பகுதியில் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீஸ் பற்றாக்குறையால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட முடியாததால் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்கள் நாளுக்கு - நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர்.

போலீசார் நியமிக்கப்படுவார்களா?

சமீபத்தில் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 11 போலீசார் பிற போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கும் பிற போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய 4 போலீசாரும், தஞ்சை ஆயுதப்படையில் பணியாற்றும் 9 போலீசாரும் நியமிக்கப்பட்டனர்.இவர்களில் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு நியமிக்கப்பட்ட தஞ்சை ஆயுதப்படை போலீசார் 9 போலீசார் இன்று வரை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு வரவில்லை. இவர்கள் ஆயுதப்படையில் இருந்தவாறு வெவ்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனவே ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் போதிய அளவு போலீசாரை நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.


Next Story