'ஆதித்யா எல்-1' விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிட வேண்டுமா..? - இஸ்ரோ வெளியிட்ட தகவல்


ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிட வேண்டுமா..?  - இஸ்ரோ வெளியிட்ட தகவல்
x
தினத்தந்தி 30 Aug 2023 7:38 AM IST (Updated: 30 Aug 2023 7:40 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'ஆதித்யா எல்-1' என்ற விண்கலம், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா எல்-1' என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந்தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.

இந்த விண்கலம் திட்டமிட்ட இலக்கை 4 மாத பயணங்களுக்கு பிறகு சென்று சேர்ந்து ஆய்வை தொடங்க இருக்கிறது. பொதுவாக ராக்கெட் ஏவுவதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் தனியாக 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடத்தை இஸ்ரோ அமைத்து உள்ளது.

இந்த நிலையில் இந்த ஏவுதல் நிகழ்வை நேரில் பார்வையிட விரும்புகிறவர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் பெயரை முன்பதிவு செய்து அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.


Next Story