கரூர் மாநகராட்சி பகுதியில் வரையப்பட்ட சுவர் ஓவியங்கள்
கரூர் மாநகராட்சி பகுதியில் வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியினை விளம்பரப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள், அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள், நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் பணியாளர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம், அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. செஸ் மாதிரி வரையப்பட்ட கோலங்கள் (ரங்கோலி), செல்பி பாயிண்ட், பஸ் பின்புறத்தில் பதாகைகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பாக அச்சிடப்பட்ட மஞ்சப்பை வழங்கப்பட்டது. மேலும் அரசு அலுவலர்களுக்கான செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியினை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில் உள்ள கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுசுவரில் வரையப்பட்ட சுவர் ஓவியத்தை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.