வைகை அணை பகுதியில் புதிய குடிநீர் திட்ட பணிகள்: முதன்மை செயலாளர் ஆய்வு


வைகை அணை பகுதியில் புதிய குடிநீர் திட்ட பணிகள்: முதன்மை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணை பகுதியில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.

தேனி

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தேனி மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.

அதன்படி, வைகை அணை நீரினை ஆதாரமாக கொண்டு ரூ.1 கோடியே 62 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில், கடமலை- மயிலை, ஆண்டிப்பட்டி-தேனி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 250 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கள பொறியாளர்கள் மற்றும் துறை பொறியாளர்களுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறைகளை முறையாக பின்பற்றி குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதேபோல், வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. அந்த சுத்திகரிப்பு நிலையத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குனர் வேல்முருகன், மதுரை மண்டல தலைமை பொறியாளர் நடராஜன் மற்றும் நிர்வாக பொறியாளர்கள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story