காரைக்குடி, தேவகோட்டையில் வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை


காரைக்குடி, தேவகோட்டையில் வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
x

காரைக்குடி, தேவகோட்டையில் வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி, தேவகோட்டையில் வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காரைக்குடி

காரைக்குடி சேதுமீனாள் திருமண மண்டபத்தில் வ.உ.சி.யின் 152-வது பிறந்த தினத்தினையொட்டி வ.உ.சி. எழுச்சி பாசறையின் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பாசறை தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.பாசறை செயலாளர் காரை சக்தி வரவேற்றார். மற்றும் நிகழ்வில் பாசறையின் நிர்வாகிகள் வ.உ.சி.யின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கூட்டத்தில் வ.உ.சி. பிறந்தநாளான செப்டம்பர் 5-ந் தேதியை சுதேசி தினமாக அரசு அறிவித்து விடுமுறை வழங்க வேண்டும். வ.உ.சி.பிறந்தநாள், நினைவு நாள் இரண்டையும் மத்திய, மாநில அரசுகள் அரசு விழாவாக நடத்தி வ.உ.சி.பெயரில் விருதுகள் வழங்க வேண்டும. சுதந்திர போராட்டத்தில் அதிதீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் வ.உ.சி. யின் வக்கீல் தொழில் செய்யும் உரிமையை ஆங்கிலேய அரசு பறித்ததை நினைவூட்டும் விதமாக அனைத்து கோர்ட்டுகளிலும் வ.உ.சி.படத்தினை திறக்க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடி சட்டமன்றத்தொகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள எமது சமுதாயத்தினரை வேட்பாளராக நிறுத்த அரசியல் கட்சிகள் முன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வ.உ.சி. எழுச்சி பாசறை பொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.

தேவகோட்டை

தேவகோட்டையில் தியாகிகள் பூங்கா முன்பாக வ.உ.சி. உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தேவகோட்டை வட்ட வ.உ.சி. பேரவை தலைவர் சுப்பிரமணியபிள்ளை தலைமை தாங்கினார்.

பொருளாளர் ஜானகிராமன் பிள்ளை, அமைப்புச்செயலாளர் வெங்கிடாசலம்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜ்பிள்ளை வரவேற்றார். பேரவை நிர்வாகிகள் வ.உ.சி. உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


Related Tags :
Next Story