விருத்தபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை
விருத்தபுரீஸ்வரர் கோவில்
ஆவுடையார்கோவில் அருகே திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு சிவ ஸ்தலங்களில் மதுரைக்கு அடுத்த பெரிய சிவ ஸ்தலமாகும். இக்கோ விலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 3-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story